பாரிஜாதம் சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்... திருமாங்கல்யம், முதல் புரொமோ
ஜீ தமிழ்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு டிவி.
சீரியல்களின் ராஜாவாக சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவியும் இருக்கும் இடத்தில் இரண்டிலும் கலக்கி இப்போது முன்னேறி வருகிறார்கள் ஜீ தமிழ்.
சீரியல்களை தாண்டி இதில் ஒளிபரப்பாகும் சரிகமப ஷோ, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
புதிய தொடர்
டிஆர்பியில் குறையும் தொடர்களை முடித்து புத்தம்புதிய சீரியல்களை ஜீ தமிழ் களமிறக்கி வருகிறார்கள்.
சமீபத்தில் ஆல்யா மானசா நடிப்பில் தயாரான பாரிஜாதம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. அந்த தொடரை தொடர்ந்து இப்போது திருமாங்கல்யம் என்ற சீரியலின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது.
இரு நாயகிகள், ஒரு நாயகன் கதையம்சத்துடன் ஒளிபரப்பாகும் என புரொமோ பார்த்தால் தெரிகிறது.