திருமாங்கல்யம் எபிசோட் அப்டேட்: மகாவை மிரட்டும் மர்மம்... உண்மையை சொல்லப் போகிறாளா?
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமாங்கல்யம் தொடரில் இன்றைய எபிசோட் பரபரப்புக்கும் சஸ்பென்ஸுக்கும் பஞ்சமே இல்லாமல் சென்றது.
வருணால் அதிர்ச்சி அடைந்த திரு!
வருணைப் பற்றி தெரிந்துகொள்ள திரு, தனது துப்பறியும் நண்பர் அசோக்கை அழைத்து வருகிறார். ஆனால் வருணோ, அசோக்கைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லி அவரையே கலாய்த்துவிடுகிறார். இதனால் கடுப்பான திரு, அசோக்கிடம் கோபப்படுகிறார். பின்னர் கீழே வந்த அசோக்கையும் விடாமல் வம்பிழுக்கும் வருணால், "இவன் ரொம்ப வித்தியாசமான ஆள்!" என்று குழம்பியே அங்கிருந்து கிளம்புகிறார் அசோக்.
தாத்தா குரலில் மகாவை ஏமாற்றிய வருண்!
சமையலறையில் இருந்த மகாவுக்கு ஒரு போன் கால் வருகிறது. தாத்தா போல பேசி, "திருவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போ" என்று கூறுகிறார். அதை நம்பி சென்ற மகா, அங்கே வருணை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். தன்னை ஏமாற்றியது வருண்தான் என்பதை புரிந்துகொண்ட மகா, அவனை கடுமையாக திட்டுகிறார்.
20 லட்சம் கேட்டு மிரட்டிய ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்!
இதைத் தொடர்ந்து மகாவுக்கு இன்னொரு ஷாக் காத்திருந்தது. வெளியே வர சொல்லி வந்த போன் காலைத் தொடர்ந்து சென்ற மகா, அங்கே ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டை பார்க்கிறாள். முன்பு மகாவின் போலி கணவனாக நடிக்க இருந்த அவன், "எனக்கு 20 லட்சம் ரூபாய் தரணும். இல்லன்னா எல்லா உண்மையையும் உன் குடும்பத்திடம் சொல்லிடுவேன்" என்று மிரட்டுகிறான்.
பயந்துப் போன மகா, தன்னிடம் பணம் இல்லாததால் 10 பவுன் வளையலை கழற்றி கொடுத்து, மீதிப் பணத்தை பிறகு தருவதாக சொல்லுகிறாள். ஆனால் அவனோ, "நாளைக்கு மாலை 5 மணிக்குள் மீதி 10 லட்சமும் வேண்டும்" என்று கெடு விதித்து செல்கிறான்.
திருவிடம் உண்மையை சொல்லப் போகிறாளா மகா?
மன உளைச்சலுடன் வீட்டிற்குள் வந்த மகாவிடம், திருவுக்கு டீ எடுத்துச் செல்ல சொல்கிறார்கள். மகாவின் முகத்தில் தெரியும் பதற்றத்தை கவனித்த திரு, "என்னாச்சு மகா? ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்கிறார்.
பயத்தில் தவிக்கும் மகா, உண்மையை சொல்ல முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையை அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.