திருமாங்கல்யம் எபிசோட் அப்டேட் : உடைந்த கட்டில்... ஊர் முன்னாடி நடந்த விசித்திர சடங்கு! வெட்கத்தில் நெளிந்த திரு – மகா!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘திருமாங்கல்யம்’ தொடர், தற்போது கலகலப்பான காட்சிகளுடன் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. திரு – மகாவின் முதலிரவு அறையில் கட்டில் உடைந்து விழுந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து ஊர் வழக்கப்படி இருவரும் செய்ய வேண்டிய சடங்குகளும் காமெடியாக அரங்கேறியுள்ளன.
உடைந்த கட்டில்... வெட்கத்தில் சிரித்த திரு – மகா!
பால் சொம்புடன் அறைக்குள் வரும் மகாவிடம், தனக்குப் பசிக்கிறது என்று திரு சொல்கிறான். உடனே மகா அவனுக்குப் பால் கொடுக்க, அதைக் குடித்துவிட்டு திரு கட்டிலில் உட்கார அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் கட்டில் உடைந்து திரு கீழே விழுகிறான். சத்தம் கேட்டு வெளியே இருப்பவர்கள் பதறிப்போய் கதவைத் தட்டுகின்றனர்.

இதற்கிடையில், கட்டிலில் இருந்து திருவை எழுப்ப மகா முயற்சி செய்யும்போது, தடுமாறி அவன் மேலேயே விழுந்துவிடுகிறாள். வேறு வழியில்லாமல் கதவைத் திறக்க, உள்ளே வந்த லலிதா உட்பட அனைவரும் கட்டில் உடைந்து கிடப்பதைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கின்றனர். மகா வெட்கத்தில் நெளிய, “சும்மா உட்கார்ந்ததுக்கே கட்டில் உடைஞ்சிடுச்சு” என்று திரு சமாளிக்கிறான். அதற்கு அவர்கள், “இவ்வளவு பெரிய கட்டிலை கப்பல் மாதிரி வாங்கிப் போட்டிருக்கோம், உட்கார்ந்தா எப்படி உடையும்?” என்று கலாய்க்க, லலிதாவும் தன் பங்குக்கு கிண்டல் செய்து கலகலப்பாக்குகிறார்.
ஊர் முன்னாடி நடந்த கலாட்டா... விசித்திர சடங்கில் சிக்கிய திரு!
அறைக்குள் நடந்த விஷயத்தை ஊர் மக்கள் முன்னாடியே சொல்லி, திரு – மகாவை நிற்க வைத்து அனைவரும் கிண்டல் செய்கின்றனர். இதைப் பார்த்த மற்றொருவரும் வந்து, “வேற லெவல்” என்று கமெண்ட் அடிக்க, இருவரும் வெட்கத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர்.
இதற்கிடையில், கட்டில் உடைந்துவிட்டால் ஊர் வழக்கப்படி சில சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர். அதன்படி, திருவின் மீது தண்ணீரை ஊற்றிவிட்டு, மகாவைத் தூக்கிக்கொண்டு ஊரைச் சுற்றி வர வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் மகாவைத் தூக்கிக்கொண்டு திரு ஊர் முழுவதும் சுற்றி வர, ஊர் மக்கள் அனைவரும் இந்தக் கலாட்டாவை வேடிக்கை பார்க்கின்றனர்.
அடுத்த நாள் காலையிலும் தொடரும் சடங்கு!
ஊரைச் சுற்றி வந்து சடங்கை முடித்ததும், இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், அத்துடன் கலாட்டா முடிந்துவிடவில்லை. அடுத்த நாள் காலையிலும் ஒரு விசேஷ குளியல் சடங்கு இருப்பதாகச் சொல்லி இருவரையும் அதிகாலையிலேயே எழுப்புகின்றனர். இதைக் கேட்ட திரு, “என்ன ஊர் முன்னாடி குளிக்க வைக்கப் போறீங்களா?” என்று பதற்றத்துடன் கேட்க, “அதெல்லாம் இல்லை, வாங்க” என்று சொல்லி அழைத்துச் செல்கின்றனர்.

இதனால் அடுத்தடுத்த காட்சிகளும் கலகலப்பாக நகர்கின்றன. திரு – மகாவின் இந்த வெட்கம், சிரிப்பு, கலாட்டா நிறைந்த காட்சிகள் ‘திருமாங்கல்யம்’ தொடரில் புதுவிதமான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் இன்னும் என்னென்ன சடங்குகளில் சிக்கப் போகிறார்கள் என்பதை அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டிரம்பின் அழைப்புகளை புறக்கணித்த கிம் ஜாங் உன் - அணு ஆயுத களஞ்சியத்தை வேகமாக அதிகரிக்கும் வடகொரியா News Lankasri
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri