திருமாங்கல்யம்- மயக்க மருந்தையும் தாண்டி வட்டமல்லு போட்டியில் ஜெயித்த திரு… தலைகுனிந்த கஜேந்திரன்

By Yathrika Nov 25, 2026 05:30 AM GMT
Report

திருமாங்கல்யம் 

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘திருமாங்கல்யம்’.

விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், திருவுக்கும் கஜேந்திரனுக்கும் இடையே நடக்கும் வட்டமல்லு போட்டி இப்போது பரபரப்பைக் கூட்டியுள்ளது. திருவுக்கும் கஜேந்திரனுக்கும் இடையே யார் பெரியவர் என்பதை முடிவு செய்ய வட்டமல்லு போட்டி நடத்தப்படுகிறது.

திருமாங்கல்யம்- மயக்க மருந்தையும் தாண்டி வட்டமல்லு போட்டியில் ஜெயித்த திரு… தலைகுனிந்த கஜேந்திரன் | Thirumangalyam Serial Today Episode Storyline

இந்தப் போட்டியில் யார் தோற்கிறார்களோ, அவர்கள் மற்றவரின் சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நிபந்தனை. எப்படியாவது இந்தப் போட்டியில் திருவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கும் மோகனவள்ளி, பசுபதியுடன் சேர்ந்து ஒரு ரகசியத் திட்டம் போடுகிறாள்.

ஊர் மக்கள் அனைவரும் போட்டியைப் பார்க்கக் கூடியிருக்க, போட்டி தொடங்குவதற்கு முன்பு இருவருக்கும் பானத்தண்ணீர் கொடுக்கப்படுகிறது. அதை இருவரும் குடித்து முடித்ததும் மோகனவள்ளி பசுபதியைப் பார்க்கிறாள்.

அப்போது ஒரு பிளாஷ்பேக் காட்சி வருகிறது. அதில், போட்டிக்கு முன்பே ஒரு பெண்ணை அழைத்த மோகனவள்ளி, திருவுக்குக் கொடுக்கும் பானத்தண்ணீரில் மயக்க மருந்தைக் கலந்து கொடுக்கும்படி சொல்லியிருப்பது தெரியவருகிறது. இதையெல்லாம் அறியாத திருவும் அந்தப் பானத்தைக் குடித்துவிடுகிறான். போட்டி தொடங்கியதும் மயக்க மருந்தின் தாக்கத்தால் திருவுக்குத் தலை சுற்ற ஆரம்பிக்கிறது.

ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் கஜேந்திரனுடன் தொடர்ந்து சண்டை போடுகிறான். ஒருபக்கம் மகா, திரு வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறாள். மறுபக்கம் மோகனவள்ளியோ, கஜேந்திரனைப் பார்த்து, "அவனை விடாதே, போட்டியை முடித்துவிடு" என்று தொடர்ந்து தூண்டிவிடுகிறாள்.

ஒரு கட்டத்தில் திரு தோற்றுவிடுவான் என்று நினைக்கும் நேரத்தில், திடீரென சுதாரித்துக்கொண்டு தனது முழு பலத்தையும் காட்டுகிறான். கஜேந்திரனைத் தூக்கித் தரையில் வீழ்த்தி போட்டியில் வெற்றியும் பெறுகிறான்.

இதனால் அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைகிறார்கள். தோல்வியடைந்த கஜேந்திரனுக்கு உடம்பு முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்த வேண்டும் என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள். ஆனால், திரு அதற்கு மறுப்பு தெரிவிக்கிறான். "அதெல்லாம் வேண்டாம் பாவம். இனிமேல் அவன் என் மூஞ்சியிலேயே விழிக்காமல் இருந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

மறுபக்கம், தோல்வியால் அவமானப்பட்டு கஜேந்திரன் அங்கேயே உட்கார்ந்திருக்கிறான். அப்போது ஊர் மக்கள், "ஒழுங்கா உன் வேலையைப் பார்த்துட்டு அமைதியா இருந்திருக்கலாம். இப்போ இந்த நிலைமை வந்துடுச்சே" என்று அவனைக் கேலி செய்கிறார்கள். இதற்கிடையில் மோகனவள்ளி கஜேந்திரனுக்கு ஆறுதல் சொல்ல வருகிறாள்.

ஆனால், அங்கே வரும் பாட்டி மோகனவள்ளியைக் கடுமையாகத் திட்டுகிறார். தம்பிக்கு நல்ல புத்தி சொல்லாமல், தேவையில்லாமல் அவனைத் தூண்டிவிட்டு இப்போது ஊர் முன்னாடி அவமானப்பட வைத்துவிட்டாயே என்று பாட்டி கேட்க, கஜேந்திரன் மிகவும் மனவேதனை அடைகிறான்.

இதற்கிடையில், பானத்தண்ணீரில் மயக்க மருந்து கலந்தும் திரு எப்படி வெற்றி பெற்றான் என்று புரியாமல் மோகனவள்ளி கடும் கோபத்தில் இருக்கிறாள். இனி திருவை வீழ்த்த அவள் என்ன திட்டம் போடப் போகிறாள்? மோகனவள்ளியின் அடுத்த சதி என்ன? என்பதை அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US