திருமாங்கல்யம் சீரியல் எபிசோட் அப்டேட்: மகா அடித்த மாஸ் சிக்ஸர்... 100 கோடி ரூபாய் செக் கொடுத்து அசத்திய முதலீட்டாளர்கள்!

By Karthick Raja Nov 11, 2026 10:10 AM GMT
Report

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘திருமாங்கல்யம்’ சீரியலில், அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

லிஃப்டில் சிக்கிய திவ்யா... ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிட்ட கவிதா!

திவ்யா லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மறுபக்கம் கவிதா எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இப்படியொரு சூழலில் அலுவலகத்தில் முக்கியமான பிசினஸ் மீட்டிங் தொடங்குகிறது.

மகாவின் திடீர் என்ட்ரி... அதிர்ச்சியில் திரு!

மீட்டிங் தொடங்கியதை அறிந்த திரு, உடனே மேனேஜரைத் தொடர்புகொண்டு பேசுகிறார். அப்போது மேனேஜர், "மீட்டிங் ஆரம்பமாகிவிட்டது. மகாதான் இப்போது மீட்டிங்கை நடத்திக்கொண்டிருக்கிறார்" என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் திரு, "மகா எப்படி மீட்டிங் நடத்துவார்? உடனே வீடியோ காலில் இணைக்கச் சொல்லுங்கள். நான் பார்க்கிறேன்" என்கிறார்.

மறுபக்கம் வருண், இயர்போன் மூலம் மகாவுக்கு ஒவ்வொரு விஷயமாகச் சொல்லிக் கொடுக்கிறார். அதைக் கவனமாகக் கேட்டுக்கொள்ளும் மகா, எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் அழகாக மீட்டிங்கை நடத்துகிறார். இதையெல்லாம் வீடியோ காலில் பார்க்கும் திரு ஆச்சரியத்தில் மூழ்கிப் போகிறார். மகா மீட்டிங்கை நடத்தும் விஷயம் கவிதாவுக்கும் தெரிய வருகிறது.

திருமாங்கல்யம் சீரியல் எபிசோட் அப்டேட்: மகா அடித்த மாஸ் சிக்ஸர்... 100 கோடி ரூபாய் செக் கொடுத்து அசத்திய முதலீட்டாளர்கள்! | Thirumangalyam Serial Today Episode Update

கண்ணீரை வரவழைத்த அம்பிகா ஓல்ட் ஏஜ் ஹோம் வீடியோ!

திருவின் கனவுத் திட்டமான ஆதரவற்ற முதியோர்களுக்கான 'அம்பிகா ஓல்ட் ஏஜ் ஹோம்' பற்றி மகா பிரசன்டேஷன் கொடுக்கிறார். ஆதரவில்லாமல் தெருவில் தவிக்கும் முதியவர்கள், பெற்ற பிள்ளைகளாலேயே கைவிடப்படும் வயதானவர்கள் என அவர்களின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லும் வீடியோ திரையிடப்படுகிறது. இதைப் பார்த்த முதலீட்டாளர்கள் அனைவரும் கண்கலங்கி நெகிழ்ந்து போகிறார்கள்.

போன் இணைப்பு துண்டிப்பு... பதற்றப்படாமல் சமாளித்த மகா!

மகா பிரசன்டேஷன் கொடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், வருணுடன் இருந்த போன் இணைப்பு திடீரெனத் துண்டிக்கப்படுகிறது. இதனால் வருண் பதற்றமடைந்தாலும், மகா கொஞ்சம்கூட தடுமாறவில்லை. திரு உருவாக்கிய 'அம்பிகா ஓல்ட் ஏஜ் ஹோம்' திட்டத்தின் மினியேச்சர் மாடலை முதலீட்டாளர்களிடம் நேரில் எடுத்துக் காட்டி, அதன் சிறப்புகளைத் தெளிவாக விளக்குகிறார். மகாவின் இந்த அணுகுமுறை முதலீட்டாளர்களை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது.

100 கோடி ரூபாய் செக்... மகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

இதற்கிடையில் வாட்ச்மேன் தகவல் தெரிந்து திவ்யா லிஃப்டிலிருந்து பத்திரமாக மீட்கப்பட அவள் மீட்டிங் நடக்கும் இடத்துக்கு வருகிறார். அதே நேரத்தில் போனில் பேசும் திரு, "விமானம் தாமதமானதால் என்னால் நேரில் வர முடியவில்லை. எனக்குப் பதிலாக என்னுடைய வருங்கால மனைவி இந்தப் பிரசன்டேஷனைச் சிறப்பாக முடித்துவிட்டார்" என்று கூறுகிறார்.

மகாவின் பிரசன்டேஷனால் மிகவும் ஈர்க்கப்பட்ட முதலீட்டாளர்கள், திரு நேரில் இல்லாதபோதும் மகாவை மனதாரப் பாராட்டுகிறார்கள். அதோடு, அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்து, உடனடியாக 100 கோடி ரூபாய்க்கான காசோலையையும் மகாவின் கைகளில் கொடுத்து அசத்துகிறார்கள்.

திருமாங்கல்யம் சீரியல் எபிசோட் அப்டேட்: மகா அடித்த மாஸ் சிக்ஸர்... 100 கோடி ரூபாய் செக் கொடுத்து அசத்திய முதலீட்டாளர்கள்! | Thirumangalyam Serial Today Episode Update

முகம் மாறிய திவ்யா:

மகாவுக்கு இவ்வளவு பெரிய பாராட்டும், 100 கோடி ரூபாய் காசோலையும் கிடைத்ததைப் பார்த்த திவ்யாவுக்கு மகிழ்ச்சி என்றாலும் திரு சொன்னதைக் கேட்டு மகா தான் வருங்கால மனைவி என முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள இதைப் பார்த்த திவ்யாவுக்கு முகமே மாறிவிடுகிறது.

முதலீட்டாளர்கள் கிளம்பிச் செல்லும் நேரத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்தும் திவ்யா, "ஒரு சின்ன விளக்கம்... இவர் மகா, என்னுடைய தங்கை. இந்த அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறார். ஆனால், திருவின் உண்மையான வருங்கால மனைவி நான்தான்" என்று சொல்லி உண்மையைப் போட்டு உடைக்கிறார்.

இதைக் கேட்ட முதலீட்டாளர்கள், "நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டோம். மன்னித்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US