நல்லூர் அம்மன் கோவிலில் திரு.. உண்மையை அறிய துடிக்கும் திவ்யா - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
திருமாங்கல்யம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் திரு திவ்யாவின் திருமண பத்திரிக்கை வீட்டுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, திருமண பத்திரிகையை கொண்டு போய் நல்லூர் அம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என அம்பிகா சொல்ல திரு அதைக் கேட்டு ஷாக் ஆகிறான். நல்லூருக்கு போனால் மாட்டிப்போம் என்ற பயம் திருவுக்குள் ஒட்டிக்கொள்கிறது. இந்த சமயத்தில் தாத்தா முதலில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்துவிட்டு அதன் பிறகு நல்லூர் கோவிலுக்கு செல்லலாம் என்று சொல்ல பூஜையில் தேங்காய் உடைக்க சொல்கிறார்.
அப்போது திரு நல்லூருக்கு செல்வதிலிருந்து தப்பிக்க தேங்காயை நான் உடைக்கிறேன் என அறிவாளை கையில் வாங்க மகாவுக்கு சந்தேகம் உருவாகிறது. திரு குறுகுறுவென பார்த்துவிட்டு கையை வெட்டிக்கொள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு மகா திருவை தனியாக சந்தித்தேன் நீங்க வேண்டும்னு தானே கையை வெட்டிக்கிட்டீங்க என கேள்வி கேட்க ஆமா வேற வழி இல்ல நல்லூருக்கு போனா உண்மை தெரிஞ்சிடும் என சொல்கிறான்.

ஆனாலும் எல்லோரும் நல்லூர் கோவிலுக்கு கிளம்பி செல்கின்றனர். இங்கே கவிதா கௌதமுக்கு போன் செய்து இரண்டு திருவும் மகாவும் சேர்ந்திருந்த வீடியோ என்னாச்சு? அத வச்சு தான் வீட்ல பிரச்சனையை உருவாக்கணும் என திட்டமிடுகிறாள்.
இவர்கள் கோவிலுக்கு வர திவ்யா மகா குறித்து விசாரிக்க தொடங்க திரு தனக்கும் மகாவுக்கும் திருமணம் செய்து வைக்க கவுன்சிலரை பார்த்து ஷாக்காகி அங்கிருந்து வெளியேறிய முயற்சி செய்ய கவுன்சிலர் திருவை பார்த்து விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.