புத்தாண்டில் புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்ட திருமுருகன்- சந்தோஷத்தில் ரசிகர்கள், ஆனால் டுவிஸ்ட்
திருமுருகன்
தமிழ் சினிமாவில் பரத் நடித்த எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் திருமுருகன்.
படங்களை தாண்டி இவர் சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன்நிலவு, குலதெய்வம், கல்யாண வீடு ஆகிய சீரியல்களை இயக்கியிருந்தார். அவர் இயக்கிய சீரியல்கள் அனைத்துமே மக்களிடம் செம ஹிட் தான்.
கடந்த 2020ம் ஆண்டு இவரது இயக்கத்தில் கடைசியாக கல்யாண வீடு சிரயல் முடிவடைந்தது.
புதிய தொடர்
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் திருமுருகன் ஒரு புதிய புராஜக்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால் அந்த புராஜக்ட் தொலைக்காட்சிகளில் வராது என்றும் தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கேட்டதும் ரசிகர்கள் அவரது அடுத்த புராஜக்ட் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ஆவலாக உள்ளனர்.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
