மெட்டி ஒலி 2ம் சீசன் பற்றி வந்த அப்டேட்: திருமுருகன் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி
சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் ஆன சீரியல் மெட்டி ஒலி. அந்த தொடர் ஒளிபரப்பை முடித்து கிட்ட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. ரீடெலிகாஸ்ட் ஆன போது கூட ரசிகர்கள் தொடரை விரும்பி பார்த்தார்கள்.
இந்நிலையில் மெட்டி ஒலி 2ம் சீசன் தொடங்குகிறது எனவும் அதற்காக பணிகள் நடந்து வருகிறது என கடந்த வருடமே செய்தி பரவியது. ஆனால் தற்போது வரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வராமல் இருக்கிறது.
திருமுருகன் இயக்கவில்லை
இந்நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் வந்திருக்கிறது. அதன்படி இந்த மெட்டி ஒலி 2 சீரியலை திருமுருகன் இயக்கவில்லையாம்.
விக்ரமாதித்தன் என்பவர் தான் இயக்குகிறாராம். இதனால் திருமுருகன் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். விரைவில் சன் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.