வெளியேறிய வெங்கடேஷ் பட்.. குக் வித் கோமாளியில் அவருக்கு பதிலாக வரும் புது நடுவர்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ கடந்த நான்கு வருடங்களாக பெரிய வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோவாக இருந்துவருகிறது.
அடுத்து 5ம் சீசன் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என்று தான் ரசிகர்களும் வெயிட்டிங்.
ஆனால் CWC யில் நடுவராக இருந்துவந்த செஃப் வெங்கடேஷ் பட் திடீரென வெளியேறுவதாக அறிவித்தார். அவருடன் செஃப் தாமுவும் வெளியேறுவதாக வீடியோ வந்தது. ஆனால் அந்த வீடியோவை நீக்கி விட்டனர்.
புது நடுவர் இவரா?
இந்நிலையில் தற்போது ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது. செஃப் தாமு நடுவராக தொடர்வார் என்றும், அவருடன் நடிகர் சுரேஷ் நடுவராக வர இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்திவ் மணி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமும் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.