பாய்ஸ் படத்தில் அந்த மாதிரியான காட்சியில் நடிக்க இது தான் காரணம்.. நடிகை புவனேஷ்வரி விளக்கம்
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இப்படத்தில் சித்தார்த், மணிகண்டன், பரத், நகுல், ஜெனிலியா, விவேக் என்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையில் செய்யும் சேட்டைகளும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை இப்படத்தில் அழகாக காட்டியிருப்பார்கள்.

புவனேஷ்வரி விளக்கம்
இந்த படத்தில் ஐந்து இளைஞர்கள் சேர்ந்து வீட்டிற்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்து வருவார்கள். அந்த பெண் கதாபாத்திரத்தில் நடிகை புவனேஷ்வரி நடித்திருப்பார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புவனேஷ்வரி இந்த காட்சியில் நடித்தது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், " நான் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு சீரியலில் நடித்து வந்தேன். அந்த காட்சியை குறித்து இயக்குனர் ஷங்கர் சார் விவரித்தார். முதல் படத்திலேயே இது போன்ற கதாபாத்திரமா என்று மறுத்தேன்".
"அப்போது அவர், ஐந்து இளைஞர்கள் உங்களுடன் நடிக்கும் போது அவர்களின் கை விரல் கூட உங்கள் மீது படாது என்று உறுதி அளித்தார்".
"அதன் பின்னர் நானும் இப்படத்தில் நடித்தேன். இப்படத்தின் மூலம் எனக்கு தெலுங்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது" என்று கூறியுள்ளார்.

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க