சிம்புவை வேண்டாம் என்று கூறிய முன்னணி நடிகர்கள்.. பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதானா
தமிழ் திரையுலகின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இதனை தற்போது இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்டமாக படமாக்கி வருகிறார்.
இப்படத்தில், விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என திரையுலக பட்டாளமே நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், பிரமாண்ட போஸ்டருடன் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்தார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தில், முதன் முதலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவை கமிட் செய்ய, இயக்குனர் மணிரத்னம் முடிவெடுத்திருந்தாராம்.
ஆனால், அதற்கு முன் மற்ற நடிகர்களிடம் இதைக்குறித்து ஆலோசித்த போது, சிம்பு வேண்டாம் என்று சில நடிகர்கள் கூறியதால், இப்படத்தில் சிம்புவை கமிட் செய்யும் முயற்சியை கைவிட்டதாக, பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.