அதெல்லாம் பொய்! இதுதான் உண்மை! பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது இதுதான்! அடித்து சொல்லும் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறிவர்களில் ஒருவர் பாடகர் வேல் முருகன். பிக்பாஸ் வீட்டிற்குள் பாட்டு பாடி அனைவரும் மகிழ வைத்த வேல்முருகன் வெளியில் சிலர் மட்டுமே நன்கு அறிவர்.'
நாட்டுப்புற பாடகரான வேல் முருகன் கலைத்துறையில் செய்துள்ள சாதனையை பிக்பாஸ் மேடையில் வெளிப்படுத்தினார். தற்போது வேல்முருகன் 4 படங்களில் பாடல்கள் எழுதவும், 2 படங்களில் நடிக்கவும் வாய்ப்பை பெற்றுள்ளாராம்.
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த அவர் இந்த கோவிலுக்கு வந்த பின்பு தான் எனக்கு கலைமாமணி விருது கிடைத்தது. இக்கோவில் என் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் எல்லாம் ஸ்கிரிப்ட் என பலரும் கூறுவது முற்றிலும் பொய். அங்குள்ள 100 நாட்களிலு, வெளியுலக தொடர்பு, செல்போன், நாளிதழ்கள் என அனைத்து துண்டிக்கப்பட்டு, சிரமமான, மன உளைச்சலை தரும் சூழ்நிலையில் தான் இருக்க நேரிடும் என அடித்து கூறியுள்ளார்.