இந்த நடிகரின் பாடலை கேட்டாலே நான் இதை தான் செய்வேன்..! நடிகர் கார்த்தி கூறிய சுவாரஸ்யமான தகவல்..
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது இவர் நடிப்பில் சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது, இதனை அவரின் ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
ஆம், அதில் "எனக்கும் மிகவும் பிடித்த ட்ரெஸ் Denim jacket and pants, எப்போதெல்லாம் டிவி-யில் ரஜினியின் மை நேம் இஸ் பில்லா பாடல் வருகிறதோ, அப்போதெல்லாம் அந்த ட்ரெஸ் அணிவதை வழக்கமாக கொண்டேன்" என பதிவிட்டுள்ளார்.