ராஜகுமாரனை திட்டிய பிரபல தயாரிபாளர்.. பல வருடங்களுக்கு முன் தேவயானிக்காக நடந்த சம்பவம்
ராஜகுமாரன்
இயக்குனரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பல முக்கிய பிரபலங்களை பற்றி அவர் பேசி இருந்தது எல்லோருக்கும் ஷாக் கொடுத்தது.
மகேந்திரன் எல்லாம் ஒரு இயக்குனரா, ரஜினியின் படத்திற்கு கூலி என டைட்டில் வைத்தது தவறு, விஜய்க்கு அரசியலில் டெப்பாசிட் கூட கிடைக்காது என பல பிரபலங்கள் பற்றி அவர் சர்ச்சையாக பேசி இருந்தார்.

திட்டு வாங்கியவர்
இந்நிலையில் பிரபல நடிகரும் பத்ரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் ராஜகுமாரன் பற்றி ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்து இருந்தார். அந்த படத்தில் தேவயானியுடன் நெருக்கம் காட்டி இருக்கிறார் ராஜகுமாரன். அதை பார்த்து தயாரிப்பாளர் திட்டினாராம்.
காசு செலவு பண்ணி படம் எடுக்க வாய்ப்பு கொடுத்தா நீ என்ன தேவயானியை வர்ணிச்சிட்டு இருக்க என சொல்லி திட்டினாராம்.
