இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்...
சன் டிவி
இந்த வாரம் சூப்பர் ஸ்பெஷல் வாரம், இந்த வாரம் காமெடி வாரம் என ஒவ்வொரு வாரமும் சன் டிவியில் ஒரு தலைப்பில் இருக்கக் கூடிய படங்களாக ஒளிபரப்புவார்கள்.
படங்களை தேர்வு செய்து அவர்கள் ஒளிபரப்பினாலும் சீரியல்களிலும் அப்படியே இருக்கும். ஒரு சீரியலில் கடத்தல் கதைக்களம் வந்தால் மற்ற சில சீரியல்களிலும் அதுபோன்ற கதைக்களம் செல்லும், இந்த மாதிரி பல முறை சன் டிவி சீரியல்களில் நடந்துள்ளது.

அப்படி வாரா வாரம் சண்டே ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் திரைப்படங்களில் ரஜினி, விஜய், அஜித் இவர்களின் ஸ்பெஷலாகவே உள்ளது.
ரஜினி படம், அடுத்து விஜய் படம், அதற்கு அடுத்து அஜித் என இவர்களின் பழைய ஹிட் படங்களாக தேர்வு செய்து சண்டே ஒளிபரப்புகிறார்கள்.
அப்படி இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் விஜய்-த்ரிஷா நடித்த திருப்பாச்சி படம் தான் வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
