முக்கிய நடிகர்களுடன் DD நடிக்கும் படத்தில், மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்., யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பெரியளவில் பிரபலமானவர் டிடி நீலகண்டன்.
இவரை தற்போது அதிகமாக நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை, கடைசியாக ஒருசில முக்கிய நட்சத்திரங்களின் பேட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது DD தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான ஜெய், ஜீவா நடிப்பில் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தில் தற்போது அவருடன் மேலும் ஒரு விஜய் டிவி நட்சத்திரமும் நடித்துள்ளார். ஆம் மாடல் மற்றும் நடிகையுமான சம்யுக்தா சண்முகநாதனும் அப்படத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.