மண் மனம் மாறாத மண்வாசனை சுற்று.. சரிகமப 4 இந்த வார ஸ்பெஷல் அப்டேட்
சரிகமப இந்த வார ஸ்பெஷல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப.
அர்ச்சனா தொகுத்து வழங்க சீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் மண்வாசனை ரவுண்ட் நடைபெற உள்ளது. கங்கை அமரன் மற்றும் விருமாண்டி அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் எவர் கிரீன் பாடல்களை பாடி ரசிகர்களை கவர உள்ளனர்.
வெளியான ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி கங்கை அமரனிடம் பாராட்டுகளை வாங்கி குவித்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.