இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
சினிமா ரசிகர்கள் அனைவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்ன படம் வெளியாகப்போகிறது என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் வருகிற 12ஆம் தேதி திரையரங்கம் மற்றும் ஓடிடி இரண்டிலும் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என்று பார்க்கலாம் வாங்க
திரையரங்கில் வெளிவரும் படங்கள்
குட் நைட்

விநாயக் சந்திரசேகரின் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
கஸ்டடி

முதல் முறையாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கஸ்டடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இராவண கோட்டம்

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம் இராவண கோட்டம். மதயானை கூட்டம் படத்திற்கு பின் இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஃபர்ஹானா

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ஃபர்ஹானா. சர்ச்சைகளை தாண்டி இப்படம் வருகிற 12ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஓடிடி-யில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்
சமந்தாவின் சாகுந்தலம் - அமேசான் பிரைம்
ராகவா லாரன்ஸின் ருத்ரன் - சன் நெக்ஸ்ட்

அருள்நிதியின் திருவின் குரல் - நெட்பிளிக்ஸ்
ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி - ஹாட்ஸ்டார்
விமலின் தெய்வமச்சான் - டெண்ட்கொட்டா
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்