இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?- இதற்குள்ளா?
பிக்பாஸ் 7
கோடி கணக்கான பட்ஜெட்டில் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசன் கொடுத்த வெற்றி இப்போது 7வது சீசன் வரை வந்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி நிகழ்ச்சி தொடங்கியது, 5 போட்டியாளர்கள் வெளியேற 5 போட்டியாளர்கள் இப்போது வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துவிட்டார்கள்.
நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, ரசிகர்களும் தினமும் தவறாமல் நிகழ்ச்சியை பார்த்து விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.
எலிமினேஷ்ன்
வாரா வாரம் வரும் இந்த எலிமினேஷனில் இதுவரை மக்கள் நினைத்தவர்கள் தான் வெளியேறியுள்ளார். இந்த வாரம் வைல்ட் கார்டில் நுழைந்தவர்கள் கூட எலிமினேஷனில் வந்துள்ளார்.
இந்த வாரம் மாயா, ஐஷு, ஆர்ஜே பிராவோ, மணி, அக்ஷயா, அன்ன பாரதி, கானா பாலா, தினேஷ் மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.
இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டை விட்டு வெளியேறப்போவது அன்ன பாரதி என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.