எலிமினேட் ஆன போட்டியாளர், ஆனால் EFP கொடுத்து காப்பாற்றி TTF வாசன்... யாரை தெரியுமா?
பிக்பாஸ் 10
விறுவிறுப்பின் உச்சமாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 10.
நாளுக்கு நாள் போட்டியாளர்கள் போட்டிகளில் முழு ஈடுபாடுடன் விளையாடி வருகிறார்கள். 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.
இந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் கௌபாய்ஸ் Vs மாஃபியாஸ் என்ற பெயரில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது, அதில் அக்ஷிதா வாசனை தாக்கிய விவகாரம் பேசப்படுகிறது.

அதில் அக்ஷிதா வாசனை தாக்கிய குறும்படம் போடப்படுகிறது, தான் தாக்கவில்லை என கூறிய அக்ஷிதா குறும்படம் பார்த்ததும் அழுகிறார்.
எலிமினேஷன்
இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களுமே நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அக்ஷிதா வாசனை தாக்கிய பிரச்சனையால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியே அனுப்பப்படுவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
தற்போது வந்த தகவல்படி இந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து கரிஷ்மா வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதேபோல் மற்றொரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். அவர் யார் என்றால் முகேஷ் தான், ஆனால் அவரை தனது EFP மூலம் காப்பாற்றியுள்ளார் டிடிஎஃப் வாசன்.
