இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார்?- பிக்பாஸ் 7 அப்டேட்
பிக்பாஸ் 7 100 நாட்கள் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 8 பேர் வெளியேறிவிட்டார்கள், 5 வைல்ட் கார்ட்டு என்ட்ரி வந்துள்ளார்கள்.
அதோடு விரைவில் 3 போட்டியாளர்கள் உள்ளே நுழைய இருக்கிறார்கள் என்று இன்றைய புரொமோவில் காட்டப்பட்டுள்ளது, அவர்கள் யார் யார் என்பது சரியாக தெரியவில்லை. இந்த 7வது சீசனில் நிறைய அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
எலிமினேஷன்
கடந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த கானா பாலா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் நாமினேஷனில் அர்ச்சனா, மணி, பிராவோ, ஐஸ்வர்யா, பூர்ணிமா, மாயா, ரவீனா மற்றும் சுசித்ரா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.