இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?- மாயா கேங் உடையப்போகிறதா?
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் இப்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 18 பேருடன் ஆரம்பமானது.
இந்த வாரம் பூகம்பம் என்ற பெயரில் டாஸ்க் ஒன்றை அறிவித்தார் பிக்பாஸ், மொத்தம் 3 பூகம்பம் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது.
இதில் வெற்றிபெற்றால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் தோல்வியுற்றால் ஏற்கெனவே வெளியேறிய 3 போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என அறிவித்திருந்தனர்.
3 பூகம்பம் போட்டியில் ஒன்றில் மட்டுமே ஹவுஸ்மேட்ஸ் வெற்றி பெற்றனர், மற்ற இரண்டில் தோல்வி அடைந்துவிட்டனர். எனவே இந்த வாரம் இருவர் எலிமினேட் ஆக உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
எலிமினேஷன் போட்டியாளர்கள்
இந்த வார எலிமினேஷன் நாமினேஷனில் விசித்ரா, அர்ச்சனா, மணி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்கள். ரவீனா, பிராவோ, அக்ஷயா,, மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய 5 பேருக்கும் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளன.
எனவே இந்த வாரம் எலிமினேஷனில் மிக குறைந்த வாக்குகள் பெற்ற மாயா அல்லது பூர்ணிமா வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.