பிக்பாஸில் திடீரென நடந்த டபுள் எவிக்ஷ்ன்... வெளியேறிய யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர்
பிக்பாஸ் 8
மக்கள் செல்வன் தொகுத்து வழங்க ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 8.
நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட் மற்றும் சிவகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது வீட்டில் சாச்சனா, சத்தியா, தீபக், கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே.ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, தர்ஷிகா, அர்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ராணவ், மஞ்சரி, ராயன் என 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
எலிமினேஷன்
இந்த வாரம் அதிக வாக்குகளோடு முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின் ஆகியோர் டாப்பில் இருக்க இவர்களுக்கு அடுத்து மஞ்சரி, ராணவ், பவித்ரா உள்ளனர்.
மிக குறைத்த வாக்குகள் பெற்றிருப்பது ராயன், ரஞ்சித், சத்தியா, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா ஆகிய 6 பேர் தானாம்.
சாச்சனா தொடர்ந்து குறைவான வாக்குகள் பெற்று வந்தாலும் இதுவரை காப்பாற்றப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் எவிக்ட் ஆகியுள்ளார். இவரை தொடர்ந்து ஆர்.ஜே. ஆனந்தியும் எலிமினேட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.