கொண்டாட்டத்தில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், இந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷன்.. வெளியேறியவர்கள் இவர்கள்தான்
பிக்பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இப்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, அடுத்த வருடம் ஜனவரியில் ஷோவும் முடிவுக்கு வர இருக்கிறது.
தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த Freeze Task வாரம் நடந்துள்ளது. இதில் போட்டியாளர்களை தாண்டி மக்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் இருந்தது.
பின்வாங்கிக் கொண்டே போகும் விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி... கெத்து காட்டும் சன் டிவி தொடர்கள், முழு விவரம்
சௌந்தர்யா, தனது காதலன் விஷ்ணுவிடம் லக் புரொபோஸ் செய்தது, காதலர்கள் என கூறப்பட்டு வந்த அருண்-அர்ச்சனா ஒன்றாக நிகழ்ச்சியில் காணப்பட்டது என நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் இடம்பெற்றன.
எவிக்ஷன்
என்னதான் கொண்டாட்ட வாரமாக இருந்தாலும் எவிக்ஷன் நடந்து தானே ஆக வேண்டும்.
ஆமாம் இந்த வாரமும் எவிக்ஷன் நடந்துள்ளது, டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவல்படி இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.