இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா?- வெளிவந்த ரிசல்ட்
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, பிக்பாஸ் என மக்களால் கொண்டாடப்படும் நிறைய நிகழ்ச்சிகள் உள்ளன. அதில் இப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பது பிக்பாஸ் 6லது சீசன்.
கடந்த அக்டோபர் 9ம் தேதி இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் இருந்து நன்றாக விளையாடக் கூடியவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் வெளியேறிவிட்டார்கள். கடந்த வாரம் குயின்ஸி வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார்.
எலிமினேஷன்
இந்த வாரம் எலிமினேஷனுக்கு 6 பேர் கமிட்டாகியுள்ளார்கள். அசீம், ஜனனி, கதிரவன், ADK, ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாக இதில் யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.
தற்போது ஓட்டிங் நிலவரப்படி ராம் கடைசியில் உள்ளார், அவருக்கு முன்பு ஆயீஷா உள்ளார், இவர்களில் ஒருவர் வெளியேறுவார் எனப்படுகிறது.