பிக்பாஸ் 7வது சீசனில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்- வெளியேறப்போவது இவர்களா?
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7வது சீசன் 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் பலர் உள்ளார்கள், அதோடு நமக்கு மிகவும் பரீட்சயமானவர்களும் நிகழ்ச்சியில் உள்ளதாம் ஆரம்பத்தில் இருந்து ரீச் பெற்று வருகிறது.
இதுவரை வீட்டில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என 3 பேர் வெளியேறிவிட்டனர்.
அதோடு வரும் வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரீயாக 5 பேர் வர இருப்பதாக கமல்ஹாசன் அவர்களே கூறியிருக்கிறார்.
யார் யார் வரப்போகிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
டபுள் எவிக்ஷனா
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வரும் நிலையில் ஒரு ஷாக் தகவல் வந்துள்ளது.
அதாவது இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறுகின்றனர், குறைந்த வாக்குகளில் கடைசியாக இருப்பது விக்ரம் அதற்கு அடுத்து கடைசியாக அக்ஷயா இருப்பதாக கூறப்படுகிறது.