இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் இவரா?
பிக்பாஸ் 8
ஆல் டே ஜாலி டே என கடந்த சில நாட்களாக சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளனர் பிக்பாஸ் 8 போட்டியாளர்கள்.
காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும், Freeze Task நடக்கிறது. தினமும் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
உறவினர்கள் வந்து போன நிலையில் இன்றைய எபிசோடில் பவித்ராவின் தோழி சாமந்தாவும், விஜே விஷாலின் தோழி நேஹாவும் வீட்டிற்கு வருகிறார்கள்.
எலிமினேஷன்
இந்த வாரம் எலிமினேஷனுக்காக நடந்த நாமினேஷனில் அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், ராணவ், மஞ்சரி, ஜெஃப்ரி, விஷால் என 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இவர்களுக்கு கிடைத்த ஓட்டிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது விஷால், ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா ஆகியோர் டேஞ்சர் ஜோல் உள்ளதாக தெரிகிறது. இந்த 3 பேரில் அன்ஷிதா தான் குறைவான வாக்குகள் பெற்று உள்ளாராம்.
You May Like This Video