பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்- யார் தெரியுமா?
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சி தொடர்ந்து 6 வருடங்களாக வெற்றிகரமாக ஓளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஹாலிவுட்டில் இருந்து இந்தியாவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதலில் பாலிவுட்டில் தான் வெற்றிப்பெற்றது.
ஒவ்வொரு சீசனிற்கும் இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைய இப்போது 15 சீசன்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது 6வது சீசனில் உள்ளது.
இந்த சீசன் 70 நாட்களை எட்டிவிட்டது, விரைவில் முடிவுக்கும் வரப்போகிறது.
எலிமினேஷன்
21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இப்போது 11 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறிவிட்டார்கள். இந்த வாரம் கூட யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
நமக்கு கிடைத்த தகவல்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறிவிட்டார் என்கின்றனர்.
நன்றாக விளையாட கூடிய ஒரு போட்டியாளர் இவரா வெளியேறினார் என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.