இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7வது சீசன் 80 நாட்களை கடந்து ஓடுகிறது, 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பலர் வெளியேறிவிட்டனர், சிலர் மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.
இப்போது பிக்பாஸில் Freeze Task நடந்து வந்தது. இதில் எல்லா போட்டியாளர்களின் உறவினர்களும் வந்தனர், ஒரு பிரச்சனையும் இல்லாமல் போனது.
ஆனால் ரவீனாவின் சித்தி மற்றும் சகோதரர் வீட்டிற்கு வர சில Code Word பயன்படுத்தி பிரதீப் குறித்து பேச பிக்பாஸ் அவர்களை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்றி இருக்கிறார்.
இந்த விஷயம் பிக்பாஸில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
எலிமினேஷன்
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ரவீனா, விக்ரம், விசித்ரா ஆகிய 3 பேர் மட்டும் தான் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தனர்.
இதில் விசித்ரா வெளியேற நிச்சயம் வாய்ப்பு இல்லை, ரவீனா மற்றும் விக்ரம் தான். இவர்களின் ரவீனா உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர், எனவே மணி-ரவீனா இருந்தால் கண்டிப்பாக கண்டன்ட் கிடைக்கும்.
ஆகவே இந்த வாரம் விக்ரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
