இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா?- குறைவான ஓட்டுகள் இவருக்கு தானா, ரிப்போர்ட் இதோ
வாரா வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வரும் எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.
அவர் நிகழ்ச்சியை மட்டும் நடத்தாமல் மக்களுக்கு தேவையான சில கருத்துக்கள், புத்தகங்களை கூறுவார். பொது விஷயங்கள் பற்றி முக்கிய விஷயங்கள் எல்லாம் பேசி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்.
இந்த வாரமும் அவரது எபிசோடுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, சிபி, பாவ்னி, நிரூப், வருண், அக்ஷாரா தேர்வாகியுள்ளனர்.
இவர்களில் யார் வெளியேறுவார் என்று தெரியவில்லை ஆனால் இதுவரை அதிகம் ஓட்டிங் பெற்றவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
முதல் இடத்தில் பிரியங்கா இருக்க கடைசி இடத்தில் அக்ஷாரா மற்றும் வருண் உள்ளார்கள்.
இதில் யார் வீட்டில் இருக்க போகிறார், யார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.