இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ
ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் குறித்த குட்டி லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதோ,
மட்கா :
பிரபல தெலுங்கு ஸ்டார் வருண் தேஜ் நடித்து வெளியான மட்கா திரைப்படம் நேற்று அதாவது டிசம்பர் 6 - ம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தை கருணா குமார் இயக்கியுள்ளார்.
சார் :
கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து விமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சார். போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான இப்படம் நேற்று அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது.
ஜிக்ரா :
வாசன் பாலா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜிக்ரா. இப்படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
