இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்.. லிஸ்ட் இதோ
திரையரங்கை தாண்டி OTT-ல் படம் பார்க்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. படங்கள், வெப் தொடர்கள் என மக்கள் OTT பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் OTT-ல் வெளியாகம் படங்கள் மற்றும் வெப் தொடரின் ரிலீஸ் தேதி குறித்து கீழே காணலாம்.
வேட்டையன்:
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் போலீஸ் கதைக்களத்தை மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையன். இப்படம் வரும் நவம்பர் 8-ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏ.ஆர்.எம்:
ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஏ.ஆர்.எம். இந்த திரைப்படம் வரும் 8 - ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

Citadel: Honey Bunny:
நடிகர் வருண் தவானுடன் இணைந்து சமந்தா நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரும் வெப் தொடர் சிட்டாடெல் ஹனி பனி. இந்த தொடர் வரும் நவம்பர் 7 - ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri