இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ
திரையரங்கை தாண்டி OTT-ல் படம் பார்க்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது. படங்கள், வெப் தொடர்கள் என மக்கள் OTT பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்து கீழே காணலாம்.
லக்கி பாஸ்கர்:
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் "லக்கி பாஸ்கர்". இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இன்று அதாவது 28 - ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
பிளடி பெக்கர்:
நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பிளடி பெக்கர்'.
நெல்சன் தயாரிப்பில் டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவின் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இன்று அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் ஆகிய OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
பிரதர்:
ஜெயம் ரவி நடிப்பில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்து வெளியான திரைப்படம் 'பிரதர்'. இப்படம் நாளை 29 - ம் தேதி ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
