இந்த வாரம் OTT-ல் வெளிவரும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் .. லிஸ்ட் இதோ
திரையரங்கில் ரசிகர்களால் எப்படி ஒரு திரைப்படம் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் அப்படத்தை OTT-ல் கொண்டாடவும் குறிப்பிட்டு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த வாரம் OTT-ல் வெளிவரவுள்ள தரமான தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் குறித்து கீழே காணலாம்.
மெய்யழகன்:
கார்த்தியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் மெய்யழகன். பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 25-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கடைசி உலகப் போர்:
தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு, இசை, படங்களை இயக்குவது என பல துறைகளில் கலக்கி கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி நடித்தும், இயக்கியும் வெளிவந்த திரைப்படம் கடைசி உலகப் போர்.
இப்படம் வருகிற அக்டோபர் 25-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.
கோழிப்பண்ணை செல்லதுரை:
சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20 வெளிவந்த படம் கோழிப்பண்ணை செல்லதுரை. யோகிபாபு, பிரிகிடா, ஏகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இந்த படம் அக்டோபர் 24 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஐந்தாம் வேதம்:
நடிகை சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த வெப் தொடர் ஐந்தாம் வேதம். இந்த தொடர் அக்டோபர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
