இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ
ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் குறித்த குட்டி லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதோ,
ஸ்குவிட் கேம் 2:
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வெப் தொடரில் ஸ்குவிட் கேம் தொடரும் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் இன்று வெளியாகி உள்ளது.
சொர்க்கவாசல்:
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் புழல் சிறையில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் சொர்க்கவாசல். இப்படம் நாளை அதாவது டிசம்பர் 27 - ம் தேதி வெளியாகிறது.
ஜாலியோ ஜிம்கானா:
பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த இப்படம் நாளை அதாவது 27 - ம் தேதி ஆஹா OTT தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளது. இதில், பிரபு தேவா ஜோடியாக மடோனா செபாஸ்டியன் மற்றும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.