இந்த வாரம் OTT-ல் வெளிவரும் தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
திரையரங்கில் ரசிகர்களால் எப்படி ஒரு திரைப்படம் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் அப்படத்தை OTT-ல் கொண்டாடவும் குறிப்பிட்டு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த வாரம் OTT-ல் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
டிமான்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் இணைந்து நடித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த படம் டிமான்டி காலனி 2. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கொட்டுக்காளி
சூரி மற்றும் அன்னா பென் நடிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கொட்டுக்காளி. இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மின்மினி
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வித்தியாசமான முயற்சி உருவான திரைப்படம் மின்மினி. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது.

சரிபோதா சனிவாரம்
தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 26ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது. ஆத்ரேயா இயக்கத்தில் உருவான இப்படத்தில் நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தனர்.

முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம் IBC Tamilnadu
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri