இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ
சினிமா ரசிகர்கள் என்று படங்களை விரும்பி பார்ப்பதற்கு தனி கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்:
தனுஷ் இயக்கத்தில் வரும் 21 - ம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி உள்ள இந்த படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
டிராகன்:
இளம் ஹீரோக்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வரும் 21 - ம் தேதி வெளியாகும் திரைப்படம் டிராகன். இப்படத்தை, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.