இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ
சினிமா ரசிகர்கள் என்று வெளியாகும் புது படங்களை விரும்பி பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், நாளை அதாவது மார்ச் 7 - ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.
கிங்ஸ்டன்:
கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் கிங்ஸ்டன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜென்டில்வுமன்:
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜென்டில்வுமன். இப்படத்தில் ஹரிகிருஷ்ணன் உடன் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவும் நடித்துள்ளார்.
நிறம் மாறும் உலகில்:
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். இப்படத்தில் நட்டி, யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
