இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவுள்ள இரண்டு முக்கிய போட்டியாளர்கள்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் 5 தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து, பல கடுமையான டாஸ்குகளை போட்டியாளர்கள் கடந்து வருகிறார்கள்.
இதில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வருண் மற்றும் அக்ஷரா இருவரும் டபுள் எவிக்ஷன் என்ற முறையில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த டபுள் எவிக்ஷன் ரசிகர்கள் அனைவரையுமே மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி மூன்று வாரம் என்பதினால், வீட்டிலுள்ள அணைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டனர்.
இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கடைசி வரை போராடி அமீர் டிக்கெட்டை வென்று விட்டார் எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டார்.
இந்நிலையில், இந்த வாரம் சிபி மற்றும் சஞ்சீவ் தான் வெளியேற போகிறார்கள் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட் :
நேற்று நமக்கு கிடைத்த தகவலின்படி சிபி மற்றும் சஞ்சீவ் இருவரும் வெளியேறப்போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த எவிக்ஷனில் இருந்து சிபி காப்பாற்றப்பட்டுவிட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம், ஞாயற்று கிழமை இரவு என்ன நடக்கிறது என்று..