பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா, ரோஜா சீரியல்- TRPயில் முதல் இடத்திற்கு வந்த புதிய தொடர்
தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு சின்னத்திரை கலைகட்ட தொடங்கியுள்ளது என்றே கூறலாம். மக்கள் அதிகம் வீட்டில் முடங்க தொலைக்காட்சி பார்க்கும் பார்வையாளர்கள் அதிகம் வந்துவிட்டார்கள்.
நாளுக்கு நாள் தொடர்களுக்கான பார்வையாளர்கள் அதிகம் வருகிறார்கள். எனவே மக்களை டிவி பக்கமே வைத்திருக்க நிறைய போட்டி நடக்கிறது.
வாரா வாரம் தொடர்களில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற சீரியல் என TRP விவரம் வரும், அப்படி இந்த வாரமும் சீரியல்களின் ரேட்டிங் விவரம் வந்துள்ளது.
அதில் சன் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்பட்ட கயல் சீரியல் தமிழ்நாட்டு சீரியல்களிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுநாள் வரை முதலில் இருந்துவந்த ரோஜா, பாரதி கண்ணம்மா எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
சரி டிஆர்பியில் முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் தொடர்களின் விவரங்களை பார்ப்போம்,
- கயல்- 11.21
- பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா- 11.4
- ராஜா ராணி- 10.1
- வானத்தை போல- 10.75
- சுந்தரி- 10.43