சன் டிவி சீரியலின் TRP ரேட்டிங்கை தும்சம் செய்து டாப்பில் வந்த விஜய் சீரியல்- முதல் இடத்தில் இந்த தொடரா?
விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் அதிரடி திருப்பங்களுடன் சில தொடர்கள் இருந்தன. அதில் ஒன்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்.
ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்கான இந்த சீரியல் தமிழில் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் குடும்ப தலைவிகளின் ஆதரவை இந்த தொடர் அதிகம் பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக தனது குடும்பத்தையும், கள்ளக் காதலியையும் ஏமாற்றி வந்த கோபியின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது.
உண்மை தெரியவரும் இந்த எபிசோடு படு சூடாக ஓடியது என்று தான் கூற வேண்டும்.
TRP ரேட்டிங்
கடந்த சில மாதங்களாகவே சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் முதல் இடத்தில் இருந்து வந்தது. தற்போது இந்த வாரம் கயல் சீரியலை தோற்கடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளது பாக்கியலட்சுமி.
அடுத்தடுத்த
- கயல்
- வானத்தைப் போல
- சுந்தரி
- ரோஜா
- கண்ணான கண்ணே
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- பாரதி கண்ணம்மா
- எதிர்நீச்சல்
- தமிழும் சரஸ்வதியும்