இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ
தொலைக்காட்சி
திரையரங்கில் புதிய படங்களை கொண்டாடுவது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறதோ, அதே போல், நாம் திரையரங்கில் கொண்டாடிய திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதும் பெரும் மகிழ்ச்சியை தரும்.

அதுவும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் அமர்ந்து விளம்பர இடைவெளியுடன் படம் பார்ப்பது என்பது தனி அலாதியான சந்தோஷம்தான்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை என்ன திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பதை தெரிந்துகொள்ள இப்போதும் கூட தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களுக்காக இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்களை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
ஒளிபரப்பாகும் படங்கள்
வருகிற ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 26ஆம் தேதி அன்று சன் டிவியில் காலை 9.30 மணிக்கு விஜயகாந்தின் தவசி திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு தனுஷ், த்ரிஷா இணைந்து நடித்த கொடி திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

பின் மாலை 6.30 மணிக்கு விஷால், கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடித்த சண்டக்கோழி 2 திரைப்படம் ஒளிபரப்பாகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் இந்த மூன்று திரைப்படங்களையும் பார்த்து மகிழுங்கள்.
You May Like This Video
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri