இந்த வாரம் சண்டே சன் டிவியில் ஜெயம் ரவி, விஷால் பட ஸ்பெஷல்... என்னென்ன படங்கள் தெரியுமா?
சன் டிவி
சன் தொலைக்காட்சி, தமிழ் சினிமா ரசிகர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் டிவி.
அதிலும் கிராமங்களில் எடுத்துக்கொண்டால் வீட்டுப் பெண்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு சன் டிவி ஆன் செய்தால் இரவு வரை தொடர்ந்து சீரியல்கள், இடையில் மட்டும் ஒரு படம் என தொடர்ந்து பார்ப்பார்கள்.
சன் டிவியிலும் மக்கள் ஆர்வமுடன் பார்க்கும் அளவிற்கு விதவிதமான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

சண்டே ஸ்பெஷல்
வார நாட்கள் முழுவதும் ஒரே சீரியல்களாக ஒளிபரப்புவார்கள், ஆனால் சண்டே வந்தால் படங்களின் ஸ்பெஷல் தான்.
காலை 10 மணிக்கு ஒரு படம், பிற்பகல் 2.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு என 3 படங்கள் ஒளிபரப்புவார்கள்.

இந்த வாரம் காலை 10 மணிக்கு, ஜெயம் ரவி மற்றும் சதா நடிக்க மெகா ஹிட்டான ஜெயம் படமும், பிற்பகல் 2.30 மணிக்கு விஷால் நடித்த தாமிரபரணி படமும் ஒளிபரப்பாக உள்ளதாம்.