தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்..இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் லிஸ்ட் இதோ!!
இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவுக்கு எப்போதும் ஒரு மார்க்கெட் உண்டு. அந்த வகையில் நல்ல படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது ஒரு புறம்.
நூறு கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்யும் படங்கள் ரிலீஸ் ஆவது ஒரு புறம் என ஆண்டுக்கு 200-ல் இருந்து 300 படங்கள் வரையிலும் கூட ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில், என்ன என்ன படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆக போகிறது குறித்து பார்க்கலாம்.
போட்:
சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் போட். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி போட் படம் வெளியாகவுள்ளது.
ஜமா:
லேர்ன் அண்ட் டீச் என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை பாரி இளங்கோவன் இயக்கியும் நடித்தும் உள்ளார்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இளையராஜா இசையில் படத்தை உச்சிக்கு எடுத்து சென்று விட்டார் எனவும் இயக்குனர் பாரி இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ஆகஸ்ட் 2 -ல் வெளிவரவுள்ளது.
மழை பிடிக்காத மனிதன்
விஜய் ஆண்டனி நடிப்பு விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான மழை பிடிக்காத மனிதன் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இப்படத்தில் சத்யராஜ், சரத்குமார் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.
பேச்சி
இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை காயத்ரி, பாலா சரவணன் நடிப்பில் பேச்சி திரைப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
