AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட இது தான் காரணமா? வெளியான தகவல்
நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதையடுத்த அஜித்தின் அடுத்து படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போகிறார் என்று கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க போகிறார் எனவும், காமெடியனாக சந்தானம் இப்படத்தின் மூலம் ரி- என்ட்ரி கொடுக்க போகிறார் என்று தகவல் வெளியானது.
AK 62 திரைப்படதின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளார் என்ற செய்தி தற்போது உலா வருகிறது.
காரணம்
விக்னேஷ் சிவன் சொன்ன கதை லைக்கா நிறுவனத்திற்கும், அஜித்திற்கு பிடிக்கவில்லையாம். மேலும் இந்த கதையை மாற்ற லைக்கா நிறுவனம் 8 மாதம் கால அவகாசம் கொடுத்தார்களாம்.
இருப்பினும் இதை சரியாக விக்னேஷ் சிவன் பயன்படுத்தி கொள்ளாததால் AK 62 படத்தில் இருந்து விலகியுள்ளதாக மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் தான் உறுதியாகும்.

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
