2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ!
இப்போது 2025ம் ஆண்டு முடிய போகிறது. இந்த ஆண்டு பல படங்கள் வெளியாகி உள்ளது. இதில், சில படங்கள் மாஸ் ஹிட் கொடுத்தது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு தமிழ் சினிமா கொடுத்த ஹிட் படங்களில், எதிர்பாரா வெற்றியை ருசித்த திரைப்படங்கள் சில உள்ளன.
அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
மதகஜராஜா:
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி:
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆண் பாவம் பொல்லாதது:
ரியோ ராஜ் நாயகனாக நடித்த இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கி இருந்தார். இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்கையோடு கனெக்ட் செய்துகொள்ளும் விதமாக இப்படம் இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சக்தித் திருமகன்:
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான அரசியல் த்ரில்லர் திரைப்படம் சக்தி திருமகன். அருண்பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம் இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட் படங்களில் ஒன்று.

லெவன்:
லோகேஷ் அஜல்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் வெளியாகி எதிர்பாரா வெற்றியை ருசித்த படம் லெவன். அதிகளவிலான இரட்டையர்கள் நடித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது.

பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri