2024 - ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் தெரியுமா.. லிஸ்ட் இதோ
சினிமாவில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் போன்று இப்போதெல்லாம் சின்னத்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வலம் வருகின்றனர்.
தற்போது, சினிமா துறையை போன்று சின்னத்திரையில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் யார் என்பதை குறித்து கீழே காணலாம்.
வெற்றிவசந்த் - வைஷ்ணவி:
சிறகடிக்க ஆசை தொடர் கதாநாயகன் மற்றும் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவியும் காதலித்து சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர்.
கண்மணி மனோகரன் - அஷ்வத்:
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமானவர் கண்மணி. இவர் அவருடைய நீண்டகால காதலரான அஷ்வத்தை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
சுரேந்தர் - நிவேதிதா:
திருமகள் தொடரின் மூலம் பிரபலமான நடிகை நிவேதிதா, அதே தொடரில் நடித்த நாயகன் சுரேந்தரை பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரேம் ஜேக்கப் - ஸ்வாசிகா:
நீ நான் காதல் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் பிரேம் ஜேக்கப், இவர் லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஸ்வாசிகாவை திருமணம் செய்து கொண்டார்.