வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!
விஜய், அஜித்தைவிடவும் 90களில் டாப்பில் இருந்தவர் பிரஷாந்த். ஆக்ஷன், ரொமான்ட்டிக், காமெடி என அனைத்து ஜானர் படங்களையும் நடித்து, அப்போது வளர்ந்துவந்த ஹீரோக்களுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த்.
அவரது தந்தை தியாகராஜன் சினிமாவில் இருந்தாலும், பிரசாந்த் முறையாக பல கலைகளை பயின்றுவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தார். அவர் நடித்த முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதை அடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீதுதான் திரும்பியது.
இந்த நிலையில், தற்போது அந்தகன் படத்தின் மூலம் ஹீரோவாக கம் பேக் கொடுக்கவுள்ளார். இந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டில் வெளிவந்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.
அந்தாதூன் படம் ஹிந்தி மட்டுமின்றி பலமொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனவே அந்த படத்தை ரீமேக் செய்வதன் மூலம் பிரசாந்த் விட்ட இடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படமானது ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது வனிதா குறித்து பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தியாகராஜன், இந்தப் படத்தின் ஒரு காட்சிக்கு எமோஷன் வேண்டும் என்பதற்காக வனிதாவை அழைத்து உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தையெல்லாம் பேசு என்று சொன்னேன்.
[NBCKY ]
அதற்கு அவர், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பச்சை பச்சையாக பேசிவிட்டார். அதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள். மேலும், இந்த காட்சிக்கு சென்சார்ல என்ன பண்ணப்போறீங்க என்று கேட்டார்கள். அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போதைக்கு இந்த சீனுக்கு எமோஷன் தேவை என்று சொல்லிவைத்தேன் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
