சர்தார் 2 திரைப்படத்தில் மூன்று நடிகைகள்.. யார்யாரெல்லாம் தெரியுமா, இதோ
சர்தார் 2
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
[YTGB7N ]
இதை தொடர்ந்து சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. பிரமாண்டமாக துவங்கிய இந்த படப்பிடிப்பில் கார்த்தி வயதான கெட்டப்பில் கலந்துகொண்ட வீடியோ கூட வெளிவந்தது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் இறந்துபோன சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய குடும்பத்திற்கு கார்த்தி தனது சார்பில் இருந்து உதவியுள்ளார் என தகவல் கூறுகின்றனர்.
மூன்று நடிகைகள்
சர்தார் படத்தின் முதல் பாகத்தில் ராஷி கன்னா, லைலா மற்றும் ரஜிஷா விஜயன் என மூன்று நடிகைகள் நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்திலும் மூன்று நடிகைகள் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரகுநாத் ஆகிய மூன்று நடிகைகள் தான் சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu