மூன்று புது கோமாளிகளை களமிறக்கிய விஜய் டிவி! தொடங்கிய புது பிரச்சனை
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் பாகம் தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசனில் பங்கேற்ற புகழ் இந்த சீசனில் சில வாரங்கள் மட்டுமே வந்தார். அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருவதால் இந்த ஷோவில் பங்கேற்கவில்லை.
3 புது கோமாளிகள்
இந்நிலையில் தற்போது விஜய் டிவி மூன்று புது கோமாளிகளை களமிறக்கி இருக்கிறது. அவர்கள் செட்டுக்குள் வரும் வீடியோ தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.
பத்மப்ரியா, ப்ரனேஷ் மற்றும் ராஜப்ரியன் என்று மூவர் தான் இந்த புது கோமாளிகள். நீங்களும் ஆகலாம் கோமாளி என விஜய் டிவி நடத்திய போட்டியில் ஜெயித்தவர்கள் தான் தற்போது ஷோவுக்கு வந்திருக்கிறார்கள்.
டென்ஷன் ஆன பழைய கோமாளிகள்
தற்போது ஏற்கனவே இருக்கும் கோமாளிகள் இதனால் டென்சன் ஆகி இருக்கின்றனர். குறிப்பாக மணிமேகலை தான் சீனியர் என சொல்லி ரகளை செய்து இருக்கிறார்.
ப்ரோமோ இதோ